பொதக்குடி





அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) பொதக்குடி ஊர் உறவின் முறை முஸ்லிம் அறப்பணி சங்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறது உங்கள் அணைத்து விபரங்களும் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருக்கும் .நன்றி On line application form for The Podakkudi Jamath. Please fill the form capital letters Thank You 2018



Saturday, December 21, 2013


Friday, July 9, 2010

பெரிய பள்ளிவாசல்

Thursday, September 13, 2007

podakkudi

Wednesday, February 14, 2007

பொதக்குடியார்


படத்தோடு விளையாடு
கிடைக்கும் , எடுக்கும் அருமையான படங்களை வலைப்பூவிலிட இஷ்டதுக்கு size மாற்ற மற்றும் format (like gif,jpg,tiff,bmp) மாற்ற இலவசமாக ஒரு tool.Dont miss it.

கோப்பு பற..! பற..!
சில சமயம் பெரிய file ஒன்றை அல்லது folder-ஐ பிறருக்கு அனுப்புவது கடினமான வேலையாகிவிடுகின்றது.பொதுவாக email facility meg அல்லது gig கணக்கில் file-ஐ அனுப்ப அனுமதிப்பதில்லை.மேலும் Corporate firewall-லானது FTP access-ஐ தடுத்து விடும்.இவ்வாறான சமயங்களில் உங்களுக்கு உதவ இதோ ஒரு சுட்டி.--Folder-ஐ zip பண்ணி அனுப்புங்கள். http://www.yousendit.com/ வகை:தொழில் நுட்பம்.

மைக்ரோசாப்டின் மாயபூமி
முதலில் பெருநகரங்களை மேப் போட்டு "trouser பாண்டி" கணக்கா just படம் போட்டு காண்பித்தார்கள்.அப்புறம் சேட்டலைட் வியூ என்று சொல்லி கட்டடங்களை படம் போட்டு காண்பித்தார்கள்.இப்போ birds view என்று இன்னும் நெருங்கி கட்டடங்களையும் தெருக்களையும் காட்ட முயற்ச்சிக்கிறார்கள். இப்பொ அதிலும் கொடுமை இன்னும் அதிகமா virtual-லாக அந்த ரோட்டில் நடந்தால்,டிரைவ் பண்ணினால் எப்படியிருக்கும் என காட்ட முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.இந்த சுட்டியை முயன்று பாருங்கள்.புரியும். Microsoft Virtual Earth preview

இலவச வைரஸ் ஸ்கேன் ஆன்லைன்
இலவச செக்கியூரிட்டி செக்கப் மற்றும் இலவச வைரஸ் ஸ்கேன் ஆன்லைன்...சிமேன்டெக்கிலிருந்து... http://security.symantec.com/sscv6 Update: இன்னொரு சுட்டி http://www.trendmicro.com/hc_intro/default.asp வகை:தொழில் நுட்பம். வகை:இலவச சேவைகள்

நெட் ஸ்பீடாமீட்டர்.
உங்கள் வீட்டு அல்லது அலுவலக இணைய இணைப்பின் வேகம் எவ்வளவு என நொடிகளில் கணக்கிட்டு சொல்லுகிறது இந்த ஸ்பீடாமீட்டர்.நான் கணக்கிட்டதில் எனது இணைய இணைப்பின் வேகம் Upload speed - 938.40 kbps Download speed - 1.13Mbps. http://www.abeltronica.com வகை:தொழில் நுட்பம்

பெங்களூர் லைவ்
ஆமாம் பெங்களூரின் முக்கிய இடங்களை இப்போது நீங்கள் இணையத்தில் லைவ்வாக பார்க்கலாம். Sify-ன் புதிய லோக்கலைஸ்ட் தளம் இந்த வசதியைத் தருகிறது.(Traffic-க்கை click பண்ணி பார்க்கவும்).இதை இன்னும் கீழ்க்கண்ட நகர்களுக்கும் விரிவு படுத்த போகிறது போல தெரிகிறது. http://www.Bombaylive.in http://www.Chennailive.in http://www.punelive.in http://www.hyderabadlive.in http://www.NewDelhilive.in http://www.calcuttalive.in

இலவச வீடியோ கடல்
அதிக பட்சமாக 5 மெக் அளவுக்கு avi,mov and mpg format வீடியோபடங்களை இலவசமாக see,store மற்றும் share பண்ணிக்கலாம் இங்கே.http://www.youtube.com/ உங்கள் பதிவிலிருந்து அல்லது இணைய தளத்திலிருந்து http link கூட கொடுக்கலாம்.Just have a look.You may like it. வகை:இலவச சேவைகள்

பாஸ்வேர்ட் மறந்துபோச்சா
பொதுவாக ஈமெயில் பாஸ்வேர்ட்டோ இல்லை பிற இணையதள பாஸ்வேர்ட்டோ மறந்துபோனால் அதை திரும்பபெற வாய்ப்புகள் உள்ளன.அந்த நிலையில் "Forgot password" - link உங்களுக்கு உதவி செய்யும். ஆனால் உங்கள் கம்ப்யூட்டர் Operating System பாஸ்வேர்ட்டே உங்களுக்கு மறந்து போனால் என்னப்பண்ணுவது.இதோ சில வழிமுறைகள். Windows பாஸ்வேர்ட்மறந்துபோனால் http://www.petri.co.il/forgot_administrator_password.htm லினக்ஸ் பாஸ்வேர்ட் மறந்துபோனால் http://www.aplawrence.com/Linux/lostlinuxpassword.html ரொம்ப டெக்னிக்கலா இருக்கின்றதோ?

சென்னை - அன்று
சென்னை அந்த கால 46 அபூர்வ புகைப்படங்கள்.இதோ சில sample. Marina Beach Old Mount Road Chepauk Cricket Stadium-1891 இன்னும் அநேகம் இங்கே.Slide show and 46 photos with description. You will have fun. Slide show Photos with description வகை:சலோ இந்தியா வகை:போட்டோ காலரி

வித்தியாசமான யாகூ மெஸஞ்சர்
வழக்கமாக மெஸஞ்சர் based chat செய்ய நீங்கள் யாகூ மெஸஞ்சரையோ இல்லை MSN மெஸஞ்சரையோ இல்லை பிற Messenger Software-ரையோ இறக்கம் செய்து உங்கள் கணிணியில் install பண்ணி அப்புறமாகத்தான் chat செய்யமுடியும். இங்கே ஒரு இணைய தளம் அப்படியெல்லாம் செய்யாமல் எளிதாக சாட் செய்ய வழி காண்பிக்கிறது.அது எப்படி என முயன்றுதான் பாருங்களேன். (This Web based messenger support Yahoo,MSN,ICQ,AIM,Jabber,GTalk aswell) http://www.meebo.com Updated:நண்பர் vairam http://e-messenger.net -ரை பரிந்துரைத்திருக்கின்றார்

இலவசமாய் Fax அனுப்புங்கள் - ஆன்லைனில்
இப்போது நீங்கள் இலவசமாய் உலகெங்கும் குறிப்பிட்ட பகுதிகளுக்கு Fax அனுப்பலாம்.இந்தியாவும் included.Browser அல்லது மின்னஞ்சல் வழி அனுப்பலாமாம்.ஒரு முறை வழிமுறைகளை படித்துக்கொள்ளுங்கள்.Have fun now. http://www.tpc.int ஆக்கபூர்வமான தேவைகளுக்கு மட்டுமே இச்சேவைகளை பயன்படுத்தி நம் பெயரை காப்பாற்றிக் கொள்வோம்.:)

இலவச PDF மாற்றி - ஆன்லைனில்
எதாவது ஒரு கோப்புவை PDF ஆக மாற்ற வேண்டுமா?.மென்பொருள் எதுவும் உங்கள் கணிணியில் install-பண்ணாமலேயே,நீங்கள் எந்த ஒரு கோப்புவையும் PDF ஆக மாற்றமுடியும்.கீழ்க்கண்ட இணையத்தை முயற்சித்து பாருங்கள். http://convert.neevia.com/ http://docmorph.nlm.nih.gov/docmorph/docmorph.htm Updated: One more FREE PDF Converter - not a trial version. Download now

இலவச டிஸ்போசபிள் ஈமெயில் அக்கவுண்ட்
ஏதோ ஒரு இணைய தளம் போகிறீர்கள்.Form fillup-பண்ண சொல்கிறார்கள்.உங்கள் நிஜ ஈமெயில் ஐடி-யை கொடுத்தால் spam பண்ணி தள்ளிவிடுவார்கள் என பயப்படுகிறீர்கள்.அப்போது துணைக்கு வருவதுதான் டிஸ்போசபிள் ஈமெயில் அக்கவுண்ட்.http://mailinator.com/.இங்கே anything@mailnator.com (anything can be really you can type ANY THING) என ஈமெயில் அக்கவுண்ட் தற்காலிகமாக உருவாக்கி,மெயிலும் செக் பண்ணிக்கொள்ளலாம்.எல்லாம் கொஞ்ச நேரம் தான்.அப்புறம் இந்த ஈமெயில் அக்கவுண்ட் டிஸ்போஸாகி காணாமல் போய் விடும்.இத்தளத்தில் இதற்காக ரெஜிஸ்ட்ரேச்ன் எதுவும் பண்ணத் தேவை இல்லை. இன்னும் கொஞ்சம் ஹைடெக்காக http://www.spamgourmet.com/ இவர்கள் இதே சேவையை அளிக்கிறார்கள்.ரெஜிஸ்ட்ரேச்ன் தேவைப் படும்

பெங்களூர் - அன்று
Bangalore விதான் சவுதா Race Course M.G Road பெங்களூர் அந்த கால 32 அபூர்வ புகைப்படங்கள்.இதோ சில sample. இன்னும் அநேகம் இங்கே.Slide show and 32 photos with description. Have fun. பழைய பெங்களூர் Slide Show பழைய பெங்களூர் Photos with Description Related Link: சென்னை - அன்று-Chennai Old Photos

வெப் மெயில் மற்றும் வெப் FTP
எதாவது Service provider கொடுக்கும் ஒரு POP அல்லது IMAP ஈமெயில் ஐடி நீங்கள் வைத்திருந்தால் அதை எளிதாக திறக்க மற்றும் உபயோகபடுத்த http://www.mail2web.com இணையதளம் உதவுகிறது.முற்றிலும் இலவசம்,பதிவு பண்ண வேண்டிய தேவை இல்லை.பொதுவாக POP அக்கவுண்ட் நீங்கள் வைத்திருந்தால் Outlook Express போன்ற Mail Client-யை பயன்படுத்தும்போது உங்கள் மெயில்கள் செர்வரை விட்டு உங்கள் கணிணீயில் இறக்கப்பட்டுவிடுமாதலால் பிற கணிணிகள் வழி உங்கள் பழைய மெயில்களை செக் செய்யஇயலாது.இது போன்ற சிக்கல்களை இத்தளம் நீக்குகிறது.POP -ஐ Post Office Protocol என்பார்கள்.நாம் தமிழில் இதை "தபால் அலுவலக நெறிகள்"எனலாமா? :). http://surftp.com/index.htm வெப்தளம் இலவசமாக பாதுகாப்பாக உங்கள் கோப்புகளை ஆன்லைனில் FTP செய்ய உதவுகின்றது.எந்த ஒரு மென்பொருளும் உங்கள் கணிணியில் நிறுவ தேவை இல்லை.Fast and Easy Web based FTP.

உங்கள் ஊர் மேப்புகள்
என்னத்தான் கூகுள் எர்த்,மேப் குவெஸ்ட்,வெர்சுவல் எர்த்,யாகூ மேப் வழி அமெரிக்காவைப் பார்த்தாலும் நம்ம ஊரு மேப்புகளை நாம் பார்ப்பதற்கு நமக்கு தனி அலாதி தான்.இங்கே என் கைக்கு எட்டிய நம்ம ஊரு மேப்புகளை வரிசைப் படுத்தியுள்ளேன்.உங்களிடம் ஏதாவது லிங்க் இருந்தாலும் எனக்கு தெரிவியுங்கள்.அப்டேட் செய்துகொள்வேன்.மேப்பை பார்வையிட கீழே உங்கள் ஊர் பெயரை சொடுக்குங்கள். பழனி ஆத்தூர்-சேலம் மாவட்டம் மதுரை திருச்சி மவுண்ட்ரோடு கோவை கோவை கோடைக்கானல் ராமேஸ்வரம் சென்னை சென்னை போக்குவரத்து தஞ்சாவூர் ஊட்டி கன்னியாகுமரி கரூர் திருநெல்வேலி பணகுடி தேர்தல் ஸ்பெஷல் தமிழக சட்டசபைகள் லிஸ்ட் மேப்


திருட்டுப் பதிவு
திருட்டு வி.சி.டி போல் திருட்டுப் பதிவு எனப்படுவது சீக்கிரமாய் மார்க்கட்டில் வந்துவிடலாம்.கஷ்டப்பட்டு ஒருவர் தயாரித்த சினிமாவை எளிதாய் ஒருவர் வி.சி.டியில் காபி செய்து விநியோகித்து சம்பாத்தித்து விடுவார்.இது போல் கஷ்டப்பட்டு ஒருவர் பதிவு எழுத இன்னொருவர் அதை எளிதாய் காப்பி பேஸ்ட் பண்ணி தன்னோடைய பதிவிலோ இல்லை இணையத்திலோ வெளியிட வாய்ப்பு உண்டு. இது போல உங்கள் எழுத்துக்களை யாராவது காப்பி அடித்திருக்கிறார்களா என கண்டறிய இதோ ஒரு இலவச சேவை.Search for copies of your page on the Web. http://www.copyscape.com/உங்கள் URL-ஐ மட்டும் டைப் செய்யுங்கள். இணையம் பூரா தேடி யார் யார் உங்களிலிருந்து காப்பி அடித்திருக்கிறார்கள் என இது லிஸ்ட் போட்டு கொடுத்துவிடும். உங்கள் பதிவு அது உங்கள் உழைப்பு.அது உங்கட்கே சொந்தம்.இல்லையா?

அழிக்கப்பட்ட கோப்புகளை மீட்க
பொதுவாக நாம் அழிக்கும் கோப்புகள் தற்காலிகமாக ரீசைக்கிள்பின் போய் தங்கியிருக்கும்.எப்போ வேண்டுமானாலும் அந்த கோப்புகளை நாம் அங்கிருந்து மீட்டுக்கொள்ளலாம்.ஆனால் ரீசைக்கிள்பின்னிலிருந்தும் அழிக்கப்பட்டு போய்விட்டால் என்ன பண்ணுவது? இதோ ஒரு இலவச மென்பொருள்.முற்றிலும் அழிக்கப்பட்டு போன அனைத்து கோப்புகளையும் மீட்டுக்கொடுக்கும்.(Even after Recyclebin is emptied).இம்மென்பொருளை இயக்க உங்கள் கணிணியில் இதை நிறுவ வேண்டிய தேவை இல்லை.ஒரு கண் வைத்துக்கொள்ளுங்கள்.எப்போதாவது உதவும். Just download and run. http://www.snapfiles.com/get/restoration.html அப்டேட்: இப்பதிவின் எதிரொலிகள் http://www.unarvukal.com/ipb/index.php?showtopic=1038 http://www.muthamilmantram.com/index.php?name=PNphpBB2&file=viewtopic&t=2891

எங்கிருந்தும் உங்கள் கணிணி
இப்பொழுது உங்கள் கணிணியை நீங்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் உபயோகப்படுத்தலாம்.உங்கள் கணிணி உங்கள் வீட்டிலிருக்கும் போதே அதை எங்கிருந்து வேண்டுமானாலும் நீங்கள் பயன்படுத்தலாம்.அதுவும் இலவசமாக.எப்படி?.கொடுக்கப்பட்ட சுட்டியிலிருந்து Real VNC மென்பொருளை இறக்கம் செய்து உங்கள் கணிணியில் நிறுவுங்கள்.நிறுவும்போது உங்கள் கணிணியின் Ipaddress மற்றும் Port number-ஐ குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.பிற கணிணியிலிருந்து எதாவது ஒரு ப்ரொவ்ஸர் (like Internet explorer) வழி உங்கள் கணிணியின் டெஸ்க்டாப்பில் நுழையலாம்.(eg:http://123.123.123.123:5800) உங்கள் கணிணியை நீங்கள் அதன் முன் அமர்ந்து இருந்து பயன்படுத்துவது போலவே இதன் வழியாகவும் பயன்படுத்தலாம்.இம்மென்பொருள் பயன்பாட்டுக்கு பொதுவாக நிலையான ஐபி அட்ரஸ் இருப்பது நல்லது. http://www.snapfiles.com/get/vnc.html one more http://ultravnc.sourceforge.net/

பட்டென விண்டோஸ் சி.டி கீ
எப்போதோ நிறுவப்பட்ட உங்கள் கணிணியின் விண்டோஸ் CD Key மறந்து விட்டதா? அல்லது எங்கேயோ தொலைத்துவிட்டீர்களா?.கவலையை விடுங்கள்.இதோ ஒரு இலவச மென்பொருள்.இது நீங்கள் உங்கள் கணிணியில் விண்டோஸ் நிறுவும் போது என்ன CD Key பயன்படுத்தினீர்களோ அதை அபடியே மீட்டுத்தருகிறது.அப்புறம் என்ன.எஜ்சாய். :) http://www.softpedia.com/get/Security/Decrypting-Decoding/WinKeyFinder.shtml

எளிதாக கணிணி திரையை படமாக்க
PrintScreen எனப்படும் "திரையைப் படமாக்கல்" அதாவது கணிணி மானிடர் திரையிலுள்ளதை அப்படியே படமாக்கி சேமிக்க அல்லது ஒரு குறிப்பிட்ட விண்டோவை மட்டும் படமாக்கி சேமிக்க இதோ ஒரு இலவச எளிய அருமையான மென்பொருள் உங்களுக்காக.இதை இறக்கம் செய்து உங்கள் கணிணியில் நிறுவ வேண்டும்.பிடிக்கப்பட்ட Screen Shot-டை நேரடியாக சேமிக்கலாம் இல்லை பிரிண்டருக்கு அனுப்பலாம் இல்லை நேரடியாக மின்னஞ்சலே செய்யலாம். http://www.gadwin.com/download/ps_setup.exe அப்டேட்: நண்பர் கார்த்திகேயன் பரிந்துரைக்கும் இன்னொரு இதே பயன்பாட்டு மென்பொருள்.Looks like excellent.Give a try. http://www.mirekw.com/winfreeware/mwsnap.html

எளிதாய் உங்கள் கணிணி பற்றிய in and out தகவல்கள்
உங்கள் கணிணியைப் பற்றிய அனைத்து தனிப்பட்ட தகவல்களையும் முழுவதுமாய் அறிந்து கொள்ள,அது குறித்த சகல மென் வண் தகவல்களையும் தெரிந்து கொள்ள ஒரு அருமையான மென்பொருள்.அதுவும் இலவசமாக. இதை இயக்க இந்த மென்பொருளை உங்கள் கணிணியில் நிறுவ வேண்டிய தேவை இல்லை.Just download and run.இனி உங்கள் கணிணி மற்றும் கணிணி பாகங்களின் Brand,Model மற்றும் Configuration informations-ஐ தேடிக் கண்டுபிடிக்கவேண்டியதில்லை.முயன்றுபாருங்களேன். http://www3.sympatico.ca/gtopala/about_siw.html வகை:தொழில் நுட்பம். UPDATED: Belarc Advisor - The Belarc Advisor builds a detailed profile of your installed software and hardware, missing Microsoft hotfixes, anti-virus status, CIS (Center for Internet Security) benchmarks, and displays the results in your Web browser. http://www.belarc.com/free_download.html One more Free inventory tool even works with windows 95 98 ME NT etc http://www.pxserver.com/WinAudit.htm

வரிசைகளின் வரிசை
அனைத்து "Computer`s system File" -களும் அதன் Properties- உடன் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன இங்கே. http://www.fileproperties.com/ அனைத்து File Extension-களும் அவற்றை எப்படி திறப்பது போன்ற விவரங்களுடன் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன இங்கே http://filext.com/ அனைத்து DLL file-களும் இறக்கம் செய்யலாம் இங்கே. http://www.windll.com/ அனைத்து Linux RPM-களும் இறக்கம் செய்ய வசதியாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன இங்கே http://rpm.sh-linux.org/rpm-index-2004/index.html அனைத்து விண்டோஸ் Event Eiewer Event id-களும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன இங்கே http://www.eventid.net/ அனைத்து Microsoft Knowledge Base களும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன இங்கே http://www.kbalertz.com/ அனைத்து ISO Country Code களும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன இங்கே http://www.orangehedgehog.com/resources/content.php?show=iso_country_codes அனைத்து ASCII Code-களும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன இங்கே http://www.good-stuff.co.uk/useful/ascii.php அனைத்து RFC-களும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன இங்கே http://www.good-stuff.co.uk/useful/rfc.php அனைத்து IEEE Standard-களும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன இங்கே http://www.ieee802.org/802info.html அனைத்து Country based TLD-களும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன இங்கே http://www.iana.org/cctld/cctld-whois.htm அனைத்து Generic TLD-களும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன இங்கே http://www.iana.org/gtld/gtld.htm அனைத்து TLD-களும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன இங்கே http://data.iana.org/TLD/tlds-alpha-by-domain.txt அனைத்து Resistor Color Code-களும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன இங்கே http://www.aikenamps.com/ResistorColorCode.htm அனைத்து HTML Color Code-களும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன இங்கே http://www.orangehedgehog.com/color/ அனைத்து DOS Command-களும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன இங்கே http://www.easydos.com/dosindex.html அனைத்து Linux Command-களும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன இங்கே http://www.linuxdevcenter.com/linux/cmd/ அனைத்து Solaris Command-களும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன இங்கே http://www.allcommands.com/index.php3?page=http%3A//www.allcommands.com/solaris%2520commands%2520list.html அனைத்து SMTP Command களும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன இங்கே http://www.orangehedgehog.com/resources/content.php?show=smtp_commands அனைத்து POP3 Command களும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன இங்கே http://www.orangehedgehog.com/resources/content.php?show=pop3_commands அனைத்து Port/Protocol/Service number-களும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன இங்கே http://www.iana.org/assignments/port-numbers அனைத்து Mineral-களும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன இங்கே http://www.galleries.com/minerals/byname.htm அனைத்து IT Certifications-களும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன இங்கே http://www.infosyssec.com/infosyssec/itcert.htm அனைத்து Google Service-களும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன இங்கே http://www.tipmonkies.com/2005/11/17/the-penultimate-guide-to-google-services

msn.com இப்போது தமிழில்
கற்புக்கரசிக்கு கடற்கரையில் இடமில்லையா போன்ற செய்திகளுடன் மைக்ரோசாப்டின் கமர்சியல் போர்ட்டல் எம்.எஸ்.என் டாட் காம் இப்போது தமிழிலும் (பீட்டா வடிவம்) வழங்கப்படுகிறது.மைக்ரோசாப்டின் இன்னொரு ஊர்வயப்படுத்தல். http://content.msn.co.in/Tamil/Default.htm And Hindi version is here. http://content.msn.co.in/Hindi/Default

தலைக்காட்டாமல் வலைமேய
பொதுவாக வலை மேயும் போது (அதாங்க Browse பண்ணும் போது) உங்களை பற்றிய சகல தகவல்களும் (உங்கள் ஐபி அட்ரஸ்,போய்விட்டு வந்த தளங்கள் etc) ஏதோ ஒரு செர்வரில் பதிவாகியிருக்கும் என்பது உண்மை.நீங்கள் எதாவது விளையாட்டு காட்டினால் மோப்பம் (trace back) பிடித்து ipaddress வைத்து குறிப்பிட்ட நபரை கண்டு பிடித்து விடலாம். இவ்வாறு மாட்டிக்காமல் தலையை மறைத்து தடம் காட்டாமல் வலை மேய்தல் தான் Anonymization எனப்படுகிறது. இவ்வாறு ஒளிந்து வலைமேய ஹைடெக் மென்பொருள்கள் காசு கொடுத்து வாங்கலாம்.இல்லையேல் இலவசமாக கீழ்கண்ட மென்பொருள்களை பயன்படுத்தலாம்.கிவ் எ ட்ரை. http://anon.inf.tu-dresden.de/index_en.html http://tor.eff.org/

மைக்ரோசாப்ட் வழங்கும் இலவச இணையதளம்
மைக்ரோசாப்ட் "மைக்ரோசாப்ட் ஆபீஸ் லைவ் பேசிக்ஸ் பீட்டா" என்கிற பெயரில் இலவச இணையதளம் அதுவும் நீங்கள் கேட்கும் டாட் காம் அல்லது டாட் ஆர்க் அல்லது டாட் நெட் டொமைன் பெயரிலேயே வழங்குகிறது.என்ன மார்க்கெட்டிங் கேட்ச் மறைந்திருக்கிறதோ தெரியவில்லை.அமெரிக்கா வாழ் மக்கட்கு மட்டுமாம். இப்பொதெல்லாம் ஜெனியூனிட்டி பார்க்க கூட க்ரெடிட் கார்டு நம்பர் கேட்கிறார்கள்.எங்கு போய் முடியுமோ? http://officelive.microsoft.com/

அல்டிமேட் மெயில் அறிவிப்பாளர்
GMail, Hotmai, Yahoo mail, RediffMail வைத்திருக்கிறீர்களா? அவ்வப்போது அந்தந்த இணையம் போய் மெயில் செக்பண்ணுவது பெரிய தொல்லையாக உள்ளதா?.இதோ ஒரு மென்போருள்.இனிமேல் ஒவ்வொரு வெப்சைட்டாக எதாவது மெயில் உங்களுக்கு வந்திருக்கிறதா என தேடி அலையவேண்டியதில்லை.உங்கள் அனைத்து வெப் மெயில்களையும் ஒரே இடத்தில் இம்மென்பொருள் தொகுத்தளிக்கிறது.புதுசாக மெயில் எதாவது வந்தால் அலர்ட்டும் செய்கிறது.Try it. முற்றிலும் இலவசம்கோ.(Click the picture to enlarge) http://www.poppeeper.com/

போட்டோவைப் போடாதீர்!!!
உங்கள் படத்தை (Photo-வை) எப்போதுமே இணையத்தில் போடாதீர்-வெளியிடாதீர் என எச்சரிக்கிறது இந்த இணையம்.ஏன் என 33 காரணத்தையும் சொல்கிறார்கள்.ஒரு சிறுவனின் படம் படும் பாட்டை பாருங்கள் இங்கே. http://www.33reasons.com/

வலை இணைப்பின்றி வலைமேய
தலைப்பு விநோதமாய் இருந்தாலும் இது ஒரு விதத்தில் சாத்தியமே.எப்படி?.உதாரணமாக ஒரு வலை தளம் அநேக content-களுடன் இருக்கிறதென வைத்துக்கொள்வோம்.ஆன்லைனிலேயே வலைமேய்வது content-களை படிப்பது சில சமயம் செலவு மிக்கதாக இருக்கலாம்.இதை தவிர்க்க இருக்கவே இருக்கிறது வலைதள ரிப்பர் எனப்படும் Web Site Rippers or We Site Copiers.இம்மென்பொருள் நீங்கள் குறிப்பிடும் வலைதளத்தை முழுதாக உறிஞ்சி உங்கள் கணிணியில் வைத்துக்கொள்ளும்.அப்புறமாக நீங்கள் நெட்டை துண்டித்தபிறகும் அந்த இணையதளத்தை பார்வையிட படிக்க அது உதவும்.ஆன்லைனில் ரொம்ப படிப்பவர்களுக்கு இம்மென்பொருள் மிக்கவே உதவலாம். http://www.httrack.com/ Yes u can browse offline.நினைவிருக்கட்டும் இது ஒரு இலவச மென்பொருள்.

விண்டோஸ் எக்ஸ்பி தமிழில்...
நீங்கள் பயன்படுத்தும் ஆங்கில Windows XP-யை தமிழுக்கு மாற்ற வேண்டுமா இதோ ஒரு மென்பொருள் உங்களுக்காக.Windows XP-யின் அனைத்து கட்டளைகளையும் மெனுக்களையும் தமிழில் காட்டுகிறது.Windows XP Language Interface Pack-Tamil எனப்படும் இம்மென்பொருளை இறக்கம் செய்து உங்கள் கணிணியில் install செய்யவும்.இறக்கம் செய்ய உங்கள் கணிணியின் windows XP Genuine ஆக இருத்தல் வேண்டும் மற்றும் நீங்கள் Hotmail-லில் பயனர் ஐடி வைத்திருக்க வேண்டும்.இங்கே ஒரு screen shot உங்கள் பார்வைக்கு. மைக்ரொசோப்டின் விளக்கம் இதோ: Windows XP ® தமிழ் இடைமுக தயாரிப்பு Windows XP தொகுப்பிற்கான தமிழ் இடைமுகத் தயாரிப்பு, பெரும்பான்மையான Windows XP பயனீட்டாளர் இடைமுகத்திற்கு, தமிழ் இடைமுகத்தை அளிக்கிறது. நிறுவலின்போது, இந்த தமிழ் இடைமுகத் தயாரிப்புக்கு Microsoft Windows -இன் நம்பகச் சோதனை தேவைப்படும். அங்கீகரிக்கப்பட்ட,முழுமையாக உரிமம் பெற்ற Windows -இன் நகலைத் தான் நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்பதை இந்தச் சோதனை உறுதிப்படுத்தும். நம்பகமான Windows மென்பொருளைப் பயன்படுத்துவதன் பயன்கள் குறித்து மேலும் அறிய, Genuine Microsoft Software -ஐ பார்க்கவும். http://www.bhashaindia.com/downloadsV2/Category.aspx?ID=2 or http://www.microsoft.com/downloads/details.aspx?displaylang=ta

மைக்ரோசாப்டின் விர்சுவல் இந்தியா - தமிழில்
இந்தியாவை மேப்(Map) போடும் மைக்ரோசாப்டின் முயற்சிதான் அதன் "VirtualIndia" புராஜெக்ட்.தமிழிலும் உருவாகிவருகின்றதாம்.பக்கத்திலுள்ள படத்தை கிளிக்கி பார்க்கவும்.அமெரிக்காவில் Google earth,Microsoft virtual earth or Street and trips,Mapquest,Yahoo maps போன்றவை மிகப் பிரபலம்.வழி தெரியாத இடங்களுக்கு வழிகாட்டுவதில் (Directions)இவை மிக இன்றியமையாதவை.அதுபோல இந்தியாவில் "VirtualIndia" புராஜெக்ட் எந்த அளவுக்கு வெற்றிபெறும் என்பது போகப் போகத்தான் தெரியும்.கீழ்க்கண்ட லிங்க் இப்புராஜெக்ட் பக்கத்துக்கு இட்டு செல்கிறது. http://virtualindia.msresearch.in/ முந்தைய மைரோசாப்டின் மாயபூமி பற்றிய எனது பதிவு இங்கே Microsoft`s Virtual earth

அண்ணா மேம்பாலமும் கூகுளும்
கூகிளின் சமீபத்திய பீட்டா வெளியீடான கூகிள் எர்த் 4 (Google Earth Release 4 - BETA) எனப்படும் மென்படைப்பு முன்னைய வெளியீட்டிலிருந்து தரம் உயர்த்தி சிறப்பாக வெளியிடப்பட்டுள்ளது.குறிப்பாக இந்திய சேட்டலைட் மேப்புகள் ஓரளவு தெளிவாக இருக்கினறன.சென்னை மேம்பாலங்கள்,சமாதிகள்,பனகல் பார்க் மற்றும் அனைத்து முக்கிய இடங்களும் தெளிவாக தெரிகின்றன.இம்மென்பொருள் வழி சென்னை மட்டுமின்றி அனைத்து நகரங்களையும்,ஊர்களையும் ஏன் உங்கள் வீட்டைக்கூட சேட்டலைட் பார்வை பார்க்கலாம் .கொஞ்சம் பொறுமை வேண்டும் அவ்வளவு தான்.இதோ பக்கத்தில் சென்னை ஜெமினி மேம்பால சேட்டலைட் பார்வை உங்களுக்காக.கீழே கொடுக்கப்பட்ட சுட்டியை சொடுக்கி இலவச இம்மென்பொருளை இறக்கம் செய்து உங்கள் கணிணியில் நிறுவி பாருங்கள். http://earth.google.com/earth4.html

ரியல் மீடியா to MP3 மாற்றி
உங்களிடமுள்ள ரியல் மீடியா கோப்புகளான *.rm, *.ra, *.rmvb ஆகிய கோப்புகளை MP3-களாக மாற்ற இதோ ஒரு எளிய இலவச மென் பொருள்.கீழ்கண்ட சுட்டியை சொடுக்கி இறக்கம் செய்து கொள்ளலாம். Yes it is Free-RM-to-MP3-Converter. வகை:இலவச சேவைகள்

எல்லா வெப்சைட் பாஸ்வேர்ட்களும் இங்கே
பொதுவாக நாம் சில வலைத்தளங்களுக்கு செல்லும் போது அவற்றில் நுழைய பயனர் பெயர் (username) மற்றும் கடவுசொல் (password ) கேட்கப்படுவது வழக்கம்.(Eg: dinamalar.com,nytimes.com).அவை ஒருவேளை உங்களிடம் இல்லாவிட்டால் நீங்கள் புதிதாக பதிவுசெய்ய வேண்டி வரும்.அவ்வாறு பதிவு செய்ய நீங்கள் சில நிமிடங்கள் செலவு செய்ய வேண்டும்.சில சமயம் உங்கள் பல விவரங்களை கூட கேட்பார்கள்.அதற்கு பொறுமை இல்லையா இதோ ஒரு வலையகம் இலவசமாக அப்படி பட்ட வலையகங்களுக்கான பயனர் பெயர் மற்றும் கடவுசொல்களை வழங்குகிறது. Just type in web site name and click "Get logins".You are all set!!!. http://www.bugmenot.com/

இலவச யாகூ மெயில் பாப் அக்கவுண்ட்
யாகூ மெயிலில் பாப் (POP account) கணக்கு வைத்து கொள்ள அதாவது சாதாரண ப்ரொவ்சர் வழி மட்டும் மெயில் பார்க்காமல் Outlook,outlook express, Thunderbird or Eudora போன்ற மென்பொருள் வழி உங்கள் மென்தபால்களை பார்க்க பராமரிக்க யாகூ பாப் கணக்கு அவசியம்.இதற்கு யாகூவின் சாதாரண இலவச மெயில் கணக்கு போதாது.வருடம் $20 கொடுத்து mail plus எனும் கணக்கு வைத்திருக்க வேண்டும் அல்லது கீழ்க்கண்ட மென்பொருள்களில் எதாவது ஒன்றை பயன்படுத்தி இலவச யாகூ பாப் அக்கவுண்டை வைத்துக் கொள்ளலாம்.Yes u get free yahoo pop account. http://www.ypopsemail.com/ http://www.freepops.org/en/

டூப்ளிகேட் கோப்புகள் டிடெக்டர்
உங்கள் கணிணியில் ஒரே mp3 கோப்பு பல போல்டர்களில் திரும்ப திரும்ப உள்ளதா?.அநாவசியமாக அவை ஹார்டு டிஸ்கில் உட்கார்ந்து இடம் பிடித்துக்கொண்டிருக்கலாம்.அது போல இன்னும் பல கோப்புகள் உங்கள் கணிணியில் திரும்ப திரும்ப டூப்ளிகேட்-ஆகி ஹார்டு டிஸ்கில் இடம் பிடித்துக்கொண்டிருக்கலாம்.இதை கண்டுபிடித்து இவ்வாறு டூப்ளிகேட் ஆன பைல்களை அழிக்க இதோ ஒரு எளிய மென்பொருள் இலவசமாக.ஜஸ்ட் இறக்கம் செய்து unzip செய்து இம்மென்பொருளை ஓட விடுங்கள்.நிறுவ வேண்டிய தேவை இல்லை.ஆனால்--கொஞ்சம் கவனம்..முக்கிய விண்டோஸ் கோப்புகளை தவறுதலாக அழித்து விடாதீர். Its a cool free Duplicate File Detector. http://www.clonespy.com/cms/index.php

தடைகளை தாண்ட
சவுதி அரேபியா,இந்தியா தடை செய்த வெப் தளங்களைப் பார்வையிடப்ராக்ஸீ மற்றும் பாதுகாக்கப்பட்ட டன்னல் தொழில் நுட்பம் வழியாக ஒரு தளம் தடை செய்யப்பட்டிருந்தாலும் அதை மேயமுடியும்.எவ்வாறு? கீழ் கண்ட தளங்களில் போய் வெப்சைட் பெயரை இடுங்கள்.அல்லது உங்கள் Browser-ல் Tools-Internet Options-Connections-Lan Settings-Proxy Server-ல் ப்ராக்சி அட்ரஸ் மற்றும் போர்ட் எண் போட்டு break the rules. Vtunnel.com ProxyHero.com Browseatwork.com Econsolutant.com Note:- Not all links are working. 5.Top 200 proxies at TopProxies. வெங்கடரமணியின் பிளாக்ஸ்பாட் ஸ்பெசல் ப்ரீடம் சுட்டி இதோ. இந்த லிஸ்டில், அதாவது blogs தடை செய்யப்பட்ட நாடுகள் லிஸ்டில் இந்தியாவும் வருவது வருத்தம் தான்.ஜனநாயகத்தின் குரல் வளையை பிடித்த மாதிரி.Anyway but still there are ways to survive. updated:Heading changed from சவுதி அரேபியா,இந்தியா தடை செய்த வெப் தளங்களைப் பார்வையிட to தடைகளை தாண்ட

எங்கிருந்தாலும் விடமாட்டேன்
தலைப்பை பார்த்து பயந்துவிடவேண்டாம்.ஆனால் இது உண்மை.நீங்கள் எங்கு இருந்தாலும் விடமாட்டேன் என்கிறது இந்த மென்பொருள். "நீங்கள் எங்கிருந்து ஜாலியாக இவ்வாறு இணையத்தை மேய்ந்து கொண்டிருக்கிறீர்கள் என எனக்குத் தெரியும்" என இம் மென்பொருள் சொல்கிறது.கீழ்கண்ட சுட்டியை சொடுக்கி உலக வரைபடத்தின் வலது மேல் கோடியில் இருக்கும் View -வை தேர்ந்தெடுத்து Show Yourself-ஐ சொடுக்குங்கள்.நீங்கள் எங்கிருந்து வலைகிறீர்கள் என அப்பட்டமாக அது காட்டிக்கொடுத்துவிடும்.இந்த யூதாஸ் உங்கள் இருப்பிடத்தின் மேப் மற்றும் சேட்டலைட் பார்வைகளை காட்டிவிடுகின்றான்.காலம் கலியுகங்கோ,இணையமும் ஒரு "விடாது கருப்பு"த்தான் போலும். http://forums.digitalpoint.com/usermap.php

இலவச வீடியோ எடிட்டர்கள்
நீங்கள் எடுக்கும் வீட்டு காம்காடர் வீடியோக்களில் புகுந்து விளையாட விருப்பமா?.கிடைக்கும் வீடியோ சிடிக்கள்,பாடல் கிளிப்புகள், mp3-கள் மற்றும் உங்கள் போட்டோக்களை கலந்தடித்து டாக்குமென்டரி அல்லது வீட்டுவீடியோ செய்ய விருப்பமா?.காசுகொடுத்து வாங்க அநேக வீடியோ எடிட்டர்கள் இருக்கையில் இதோ சில இலவச வீடியோ எடிட்டர்கள் உங்களுக்காக. Free video editor. http://sourceforge.net/projects/virtualdub http://www.virtualdub.org/ http://milafat.free.fr/vdfilters.htm UPDATED: Some More TMPGEnc One of the best MPEG video encoders, convert to MPEG2 (SVCD, DVD) and MPEG1(VCD) with several settings and filters. Freeware MPEG1(VCD) encoding. Also basic joining, splitting, demultiplexing and multiplexing features. http://www.tmpgenc.net/en/e_main.html Mpg2Cut2 Fault Tolerant, GOP level, binary editor for basic cutting of Mpeg2 Program Stream files(DVD, SVCD, HDTV, DTV, TS). Handles very large files (64bit) captured from Digital Television broadcasts (DTV), including High Definiton (HDTV). http://www.videohelp.com/download/mpg2cut2_6602_libmmd_mpalib.zip MPEG2Cut Simple MPEG2/DVD/SVCD Cutter. http://www.videohelp.com/download/MPEG2Cut.zip Cuttermaran Cuttermaran is a cut program for MPEG1 or MPEG2 video streams. The streams can be cut without recalculation. The asynchronous between audio and video will be minimized. Requires demultiplexed/splitted video and audio streams, demux MPGs with tmpgenc->mpeg tools or ProjectX. Requires Microsoft .NET Framework(free). http://www.free-codecs.com/Cuttermaran_download.htm AviDemux Video editor and encoder. It can edit, encode, requantize MPG, MP4, AVI. Very much like VirtualDub, but can also encode to VCD/SVCD/DVD mpg. http://www.free-codecs.com/AviDemux_download.htm

உங்கள் போட்டோக்களை இனி இலவசமாக 3D ஆக்கலாம்
இப்போது 3D பார்வையில்- அதாங்க முப்பரிமாண பார்வையில்- போட்டோ வைத்துக்கொள்வது மிக எளிதாகிவிட்டது.தொடர்ச்சியாய் குறிப்பிட்ட பொருளை/நபரை சுற்றி வந்து உங்கள் டிஜிடல் கேமரா வழி சில படங்களை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.(பாய்ஸ் படத்தில் ஷங்கர் அந்த பாட்டுக்கு கதாநாயகன்,நாயகியை சுற்றி சுற்றி எடுப்பாரே,அப்படி).கீழ்கண்ட இணையதளம் போய் மிக எளிதாக ஆன்லைனில் அப்பொருளுக்கு/நபருக்கு 3D வியூ படம் உருவாக்குங்கள்.தனிப்பட்ட உபயோகத்துக்கு இச்சேவை இப்போது இலவசமாம்.முயற்சித்து பாருங்கள். Convert Digital Photos to 3D for Free http://www.picturecloud.com

இலவச சிடி கீ ரீடர்
CD Key Reader - இதை குறுந்தகடின் சாவி படிப்பான் எனலாமா? - சரி போகட்டும்- எப்போதோ உங்கள் கணிணியில் நீங்கள் நிறுவியிருந்த எதாவது மைக்ரோசாப்ட் மென்பொருளின் CD key மறந்து விட்டதா? இப்போது அது உங்களுக்கு தெரிந்தாக வேண்டுமா? .கவலையை விடுங்கள் .இதோ ஒரு சிறு இலவச மென்போருள் அந்த CD Key-யை விண்டோஸ் ரெஜிஸ்டிரியிலிருந்து தேடி கண்டு பிடித்து உங்களுக்கு அளிக்கிறது.ஆமாம் No installtion required.இப்போதைக்கு இந்த சிடி கீ ரீடர் மைக்ரோசாப்ட் தயாரிப்புகளுக்கு மட்டுமே பொருந்துகிறதாம். Utility to read registration keycodes from the registry. Utility to read CD keys from the registry. http://www.skaro.net/cd-keyreader/index.html

குரல் தனியே இசை தனியே பிரிக்க
MP3 பாடல்களில் வரும் பின்னணி குரலையும் (ie Singers vocal), பின்னணி இசையையும் (Music) தனியாக பிரித்தெடுக்க மென்பொருள் உளதா என்றால் ஆம் உளது எனலாம்.அதுவும் இலவசமாக.கரோகே Karaoke அல்லது வோக்கல் ரிமூவர் (vocal remover)எனப்படும் இம்மென் பொருள்களை இன்னும் நான் முயன்று பார்க்கவில்லை.யாராவது முயன்று பார்த்தால் உங்கள் அனுபவம் சொல்லுங்கள்.சினி இசை தடம் மட்டும் பிளயரில் சத்தமாக ஓட இனி இனிய குரலில் பாடி தம்பிமார் கலக்கலாம். http://www.analogx.com/contents/download/audio/vremover.htm http://www.karafun.com/index_en.html

தீச்சுவரையும் தாண்டி FTP
பொதுவாக பெரும்பாலான நிறுவனங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளில் பையர்வால் எனப்படும் தடுப்பானானது FTP கோப்பு கடத்தலை தடுத்துவிடும்.அதனால் சாதாரண FTP client-ஆல் கோப்பு மேலேற்றம் மற்றும் இறக்கம் செய்ய இயலாது.இவ்வாறான தருணங்களில் அதையும் மீறி FTP டவுன்லோட் அப்லோட் செய்ய இதோ ஒரு எளிய வழி.Browser or HTTP based ftp. Skip or bypass the firewall.எந்த ஒரு FTP client-ஐயும் உங்கள் கணிணியில் நிறுவத் தேவை இல்லை. http://web2ftp.com net2ftp.com

இலவச லோகோ ஜெனரேட்டர்
உங்கள் வலைதளம் அல்லது வலைபூக்கு அழகான ஒரு லோகோ தேவையா? லோகோவால் உங்கள் வலை பக்கத்தை அலங்கரிக்க ஆசையா? இதோ ஒரு தளம் இலவசமாக லோகோ தயார் செய்யும் வசதியை செய்து தருகிறது.ஆன் த பிளை ஆன்லைனிலேயே மிக எளிதாக லோகோவை டிசைன் செய்யலாம்.எந்த புரோகிராம் மொழியும் தெரியவேண்டியதிலை.முயன்று பாருங்கள். http://cooltext.com/ உங்கள் வலைப்பூ டெம்ப்ளேட் div id="header"-ல் imgsrc கொடுத்து லோகோவை தலைப்புக்கு பதிலாய் அழகாய் காண்பிக்கலாம். Free logo generator without lot of design work create it on the fly.

இலவச ஆடியோ சிடி ரிப்பர்கள்
ஆடியோ சிடி (Audio CD)-க்களின் ஆயுசு கம்மியாதலால் அதை MP3-ஆக்கி கணிணியில் சேமித்து வைத்தல் மெத்த உத்தமம்.அதுமட்டுமல்லாது இன்ன பிற MP3 பிளயர்களிலும் பாட வைக்க MP3 போன்ற மென் காப்பி இசைக் கோப்பு அவசியம் தேவை.சாதாரண எல்லா கணிணியிலுமுள்ள Windows Media Player -ஆல் கூட ஆடியோ சிடி-யை WMA-பார்மாட்டுக்கு ரிப் செய்ய முடியும்.கீழே சில நல்ல இலவச ஆடியோ சிடி ரிப்பர்கள் சுட்டி கொடுத்துள்ளேன்.இவை MP3 ஆக ஆடியோ சிடி பாடல்களை உறிஞ்சி தரும். Best Free audio CD Ripper http://www.exactaudiocopy.de/ http://sourceforge.net/projects/cdexos/ http://www.audiograbber.com-us.net/

பார்வைக்கு இரண்டாயிரம் தமிழ் வீடியோ கிளிப்புகள்
ஏறக்குறைய இரண்டாயிரம் தமிழ் வீடியோ கிளிப்புகள் தமிழர்கள் பார்வைக்காக யூடியூபில் அணிவகித்துள்ளன.தளபதியை முந்தி சென்று கொண்டிருக்கிறான் சுட்டும் விழி சுடரே.ஆன்லைனிலேயே பார்வையிடலாம் அல்லது கீழ்கண்ட தளம் சென்று அவ்வீடியோக்களை இறக்கம் செய்தும் பார்வையிடலாம். தமிழ் யூடியூப் ஒலிஒளி தொகுப்பு - Tamil YouTube video collection http://www.youtube.com/results?search_type=related&search_query=tamil யூடியூபிலிருந்து இறக்கம் செய்ய - Rip or save or download from YouTube video http://www.youtubex.com/ இறக்கம் செய்த .flv வீடியோவை ஓட விட பிளயர் இங்கே -Get .flv player here http://applian.com/flvplayer/index_martijn.php

கணிணி வீடியோக்களை iPod-க்கு மாற்ற
Avi, mpeg போன்ற கணிணியில் ஓடும் வீடியோக்களை iPod-ல் கண்டுகளிக்க வீடியோரா என்ற இலவச மென்பொருள் உள்ளது.இது ஐபாட்டுக்கு மட்டுமல்லாது டிவோ-வுக்கோ அல்லது எக்ஸ்பாக்ஸ்360- க்கோ அல்லது சோனி பிஎஸ்பி-க்கோ கணிணி வீடியோக்களை மாற்ற உதவுகிறது.ஐபாட் ரசிகர்களுக்கு ஒரு வரபிரசாதம். http://www.videora.com/en-us/Converter/ Computer video to ipod converters Videora iPod Converter - A free video converter for the 5th generation iPod's from Apple. Videora TiVo Converter - A free video converter for the Series 2 TiVo. Videora Xbox360 Converter - A free video converter for the Xbox 360. PSP Video 9 - A free video converter for the Sony PlayStation Portable (PSP). Videora PMP Converter - A free video converter for the PMP format playable on v1.5 PSPs.

ஐநூறு கூகிள் தமிழ் வீடியோ கிளிப்புகள்
ஏறக்குறைய ஐநூறு தமிழ் வீடியோ கிளிப்புகள் இப்போதைக்கு கூகிள் வீடியோ-ல் உள்ளன.வீடியோக்களை ஆன்லைனிலேயே பார்வையிடலாம் அல்லது இறக்கமும் செய்து கொள்ளலாம்.இறக்கம் செய்தால் கூகிள் வீடியோ பிளயர் (Google Video Player) தேவைப்படும்.இங்கிருந்து அதையும் இறக்கம் செய்து கொள்ளலாம்.மைக்ரோசாப்ட் சோப்பு பாக்ஸ் டப்பாவோடு SoapBox போட்டிக்கு வருகிறார்கள்.ஆன்லைனில் வீடியோ போட்டி சூடுபிடிக்கப்போகிறது http://video.google.com/videosearch?q=tamil&hl=en

இணையத்தில் வாய்ஸ் விடுங்கள்
வாய்ஸ் விட சிலருக்கு அநேக சீரியஸ் விடயங்கள் இருக்கும்.ஆனால் அவர்களுக்கு அவசரமாய் வலையகமோ வலைபூவோ இருக்காது.இப்படி பட்ட கருத்து கந்தசாமிகள் இணையத்தில் வாய்ஸ் விட விருப்பமா?.இங்கே ஒரு வலையகம் http://www.shorttext.com வழி செய்து தருகிறது.உங்கள் வாய்ஸ்ஸை டைப்பி url ஆக்குங்கள்.அப்படியே எல்லோருக்கும் url-ஐ அனுப்பிவையுங்கள். இதோ எனது(?) வாய்ஸ் இங்கே :) http://www.shorttext.com/7syzx நீங்கள் வாய்ஸ் விட்டால் தவறாமல் தெரிவியுங்கள். Don't have a website? Don't want a blog? Want to share a piece of code...perhaps a recipe? Just shortText it!

கீ செயினிலே உங்கள் முழுக் கணிணியும்
மடிக்கணிணி தூக்கிசெல்லும் மென்வல்லுனோர்க்கு ஓர் நற்செய்தி.வீட்டு கணிணி , அலுவலக கணிணி என இனி குழப்பம் வேண்டாம்.இரண்டு கணிணியையுமே ஒரே ஒரு USB டிரைவிலோ அல்லது iPod-டிலோ அல்லது Nokia N91,Samsung i310-யிலோ ஒரு கோப்பாக வைத்து எங்கிருந்து வேண்டுமென்றாலும் உங்கள் வீட்டு கணிணியையோ அல்லது அலுவலக கணிணியையோ இனி இயக்கலாம்.அலுவலக கணிணியில் USB drive/flash drive இணைத்து வீட்டு கணிணியை இயக்கலாம்.and vice versa.எப்படி?.மோஜோபாக் or மோஜோபேக் என அழைக்கப்படும் இந்த சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மென்பொருள் இவ்வேலையை கவனித்து கொள்கிறது.மேலும் அறிய கீழ்கண்ட வலையகம் போய் பாருங்கள். https://www.mojopac.com/portal/content/what/ இனி லேப்டாப்பை தூக்கி செல்வோர் out dated professionals.Look his/her keychain. இது போன்ற இன்னும் சில மென்தீர்வுகள் http://www.ceedo.com http://www.u3.com MojoPac MojoPack ceedo u3 Application Virtualization


இலவச ஸ்டிரீமிங் மீடியா ரெக்கார்டர்கள்
இணையத்தோடு இணைந்து ஓடும் ஆனால் நம்மால் இறக்கமோ அல்லது சேமிப்போ செய்ய இயலாத வகை ஒலி ஒளி கோப்புகளை ஸ்டிரீமிங் மீடியா -Streaming media என்கிறார்கள்.ரியல்மீடியா (RealMedia),வின்டோஸ் மீடியா (Windows Media),குயிக் டைம் (Quick Time) ஆகியவை இதற்கு உதாரணங்கள். இங்கே அநேக தமிழ் வீடியோ ஸ்டிரீமிங் மீடியாக்களை காணலாம் http://ww.smashits.com/video/cat4/tamil-songs.html இங்கே அநேக தமிழ் ஆடியோ ஸ்டிரீமிங் மீடியாக்களை காணலாம் http://ww.smashits.com/index.cfm?Page=Audio&SubPage=ShowSubCats&AudioCatID=41 இது போன்ற ஆடியோ வீடியோ ஸ்டிரீமிங் மீடியாக்களை பதிவு செய்து சேமித்துக் கொண்டு பின் மீண்டும் மீண்டும் பயன்படுத்த கீழ்கண்ட இலவச மென் பொருள்கள் உதவுகின்றன. பெரும்பாலான ஸ்டிரீமிங் மீடியா சேவைகள் பதிப்புரிமை கொண்டதால் இது போன்ற மென்பொருள்களை கவனமாய் கையாயாள வேண்டும் என அறியவும். StreamBox VCR http://p082.ezboard.com/fstreemeboxvcrfrm7.showMessage?topicID=27.topic GetASFStream http://www.urltrim.com/ct/t.php?l=77 FAQ about GetASFStream http://tinyurl.com/fwvzq SDP free video player http://sdp.ppona.com/ Record or Rip or Save streamed tamil videos and audio tracks like Replay Video and RM Recorder
தமிழ் பாட்கேஸ்டிங்
வழக்கமான ஆன்லைன் ரேடியோ போலல்லாது எப்போது வேண்டுமானாலும் சமயம் கிடைக்கும் போதெல்லாம் கேட்டு மகிழ தோன்றியிருப்பவை தான் பாட்காஸ்டிங் எனப்படும் ஒலி கோப்புகளின் அணிவகுப்பு.ஆப்பிள் ஐபாடிலிருந்து உண்டான பெயர்.இது ஒருவர் உருவாக்கிய பாடலாக இருக்கலாம் அல்லது நகைசுவை,குறு நாடகம்,இசை,செய்தி,தகவல் ஏன் பிரசாரமாகக் கூட இருக்கலாம்.No rules No regulations.பெரும்பாலும் MP3 வடிவத்தில் காணலாம். பாட்காஸ்டிங் செய்ய என்ன வேண்டும்?முதலில் ஒரு மைக்ரோ போன் வேண்டும்.உங்கள் கணிணியில் ஏற்கனவே அமந்துள்ள மைக்ரோபோனை உபயோகபடுத்தினாலும் Audio Technica 3035 Microphone அல்லது Edirol R-9 போன்ற மைக்ரோ போன் நல்ல தரமான ஒலிப் பதிவை தரும். அப்புறமாய் ஒலி கோப்புகளோடு விளையாட அதாவது record audio, edit MP3 files, cut, copy, splice மற்றும் mix sounds செய்ய இலவச மென்பொருள் Audacity இங்கிருந்து இறக்கம் செய்து கொள்ளலாம் http://audacity.sourceforge.net.மிக உயர்தர எடிட்டிங்கு-க்கு Sound Forge Audio Studio software-ஐ முயலலாம். உங்கள் பாட்காஸ்டிங்கில் கலந்து வழங்க இனிய இசைகளை இங்கிருந்து இலவசமாக எடுத்துக் கொள்ளலாம்.காப்பிரைட் பற்றி பயப்பட தேவையில்லை. http://music.podshow.com http://www.podsafeaudio.com http://www.audiofeeds.org சொற்பொழிவு பாட்காஸ்டிங்கு bit rate 48 - 56k Mono வாகவும் இசை பாட்காஸ்டிங்கு 63 - 96k Stereo-வும் வைத்தல் தகும்.உயர் bit rate (around 160kbps) இசை பாடல்களுக்கு நல்லது.வசன பாட்காஸ்டிங்களுக்கு நல்லதல்ல.முடிந்தவரை சிறிய அளவு கோப்பாக இருத்தல் நலம்.எனில் பயனர் இறக்கம் செய்ய எளிது. ID3 tag-ல் உங்களின் பெயர்,தலைப்பு,வகை குறித்து கொள்ளவும்.தேடல் மற்றும் உங்களை பற்றி அறிதல் எளிதாகும். அவ்ளோதான் ஒலிவலைப்பூ-வில் அதாங்க ஆடியோ பிளாகில் போட உங்கள் பாட்காஸ்டிங் ரெடி!! உதாரணமாய் இங்கே பாருங்கள் தமிழ் பாட்காஸ்ட்களின் அணிவகுப்பை http://odeo.com/tag/tamil http://search.singingfish.com/sfw/home.jsp Make Tamil Podcasting Online Radio Station அப்டேட்: திரு.சுந்தர் ராம்ஸ் அறிமுகபடுத்திய சக வலை பதிவாளர் நடத்தும் தமிழ்பாட்காஸ்ட் வலையகம் பார்க்க http://www.tamilpodcaster.com/ http://tamilpodcaster.blogspot.com/